yarlathirady.com

உயிரிழந்த உறவுகளை நினைவேந்த முடியும்; தடை செய்யப்பட்ட அமைப்பின் இலச்சினை பயன்படுத்த முடியாது:

[2024-11-26 11:07:00] Views:[10]

உயிரிழந்த தங்கள் உறவுகளை நினை கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் இலட்சினை மற்றும் படங்களைப் பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வை நடத்த இடமளிக்க முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும், தெற்காக இருந்தாலும், மலையகமாக இருந்தாலும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்குரிய உரிமை உள்ளது.

இதற்கு நாம் எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தவில்லை. நினைவேந்தல் நிகழ்வை எவரும் தடுத்து நிறுத்த முடியாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட தமது பிள்ளைகளை, உறவுகளை அவர்களின் சொந்தங்கள் நினைகூரும்போது அவர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர் எனக் காட்ட முற்படவும் கூடாது என்றும் அமைச்சர் இதன்போ சுட்டிக்காட்டினார்.

எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். அந்த அமைப்பின் இலட்சினை, படங்களைப் பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வை நடத்த இடமளிக்க முடியாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.