yarlathirady.com

மறுஅறிவித்தல் வரை குறிகாட்டுவான் - நெடுந்தீவு படகு சேவை இடம்பெறாது !

[2024-11-25 16:42:50] Views:[14]

குறிகாட்டுவான் நெடுந்தீவு இடையிலான படகு சேவைகள் இன்று திங்கட்கிழமை (25) காலை முதல் மறுஅறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டத்தில், இடர்நிலைமையின் போது தீவகத்திலுள்ள நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொள்ளவேண்டும் எனவும், கடல் மார்க்கமாக பயணிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப்படையினர் உதவவேண்டும் என்றும் சுகாதாரப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு கடற்படையினர் தமது உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர். அத்துடன் குறிகாட்டுவான் இறங்குதறையிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கும் இரண்டு படகுகளையும், புயல் நிலைமை ஏற்பட்டால் பாதுகாத்து தருவதற்கு கடற்படையினரின் உதவியை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கோரினார். அதற்கும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.