இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் முறைப்பாடு பதிவு !
[2024-11-25 13:21:02] Views:[10]
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் இணைந்து முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளது.
நேற்றையதினம் (24) ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனலைதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களால் ஏற்படுத்தும் இழப்பீடுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முறைப்பாட்டினை அனலைதீவு மீனவர்கள் சார்பில் அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜோன் பொஸ்கோ மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா ஆகியோர் இணைந்து பதிவு செய்துள்ளனர்.










