yarlathirady.com

வைத்தியரின் பணத்தை திருடிய இருவர் போதைப்பொருளுடன் கைது!

[2024-11-24 20:03:03] Views:[10]

யாழ்ப்பாணத்தில் வைத்தியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தினை திருடிய இருவரை போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (23) மாலை யாழ்ப்பாணம், கலட்டி அம்மன் கோயில் தட்டாதெருவுக்கு அண்மையில் வைத்தியர் ஒருவரின் விட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பின் டிக்கியை உடைத்து அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது.

குறித்த திருட்டு சம்பவம் CCTV கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அதன் உதவியுடன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் இன்று (24) காலை அரசடி, நல்லூர் பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும்போது சந்தேக நபர்களிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மற்றும் 240 மில்லிகிராம் ஹெரோயி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும், போதைக்காக சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.