ஆளுநரின் அதிரடி நடவடிக்கை; வடமாகாண அமைச்சு ஒன்றின் செயலாளரின் பதவி மீளப்பெறப்பட்டது !
[2024-11-24 12:37:52] Views:[11]
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் பதவியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மீளப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநரால் குறித்த பதவி மீளப்பெறப்பட்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் எம். ஜெகூவின் பதவியே இவ்வாறு மீளப்பெறப்பட்டுள்ளது.
எனினும் இந்த பதவி நீக்கத்திற்கான காரணம் குறித்த விளக்கத்தை ஆளுநர் அலுவலகம் வெளியாக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.










