நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு - ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி
[2024-11-24 10:53:17] Views:[12]
நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், முன்னுரிமை அடிப்படையில் 3,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை, மாதாந்த அடிப்படையில் வீடுகளுக்கு விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு குறித்த எரிவாயு நிறுவனத்திக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி இது தொடர்பில், வர்த்தமானி அறிவித்தலை ஒன்றை வெளியிட்டுள்ளார்;
சமையல் எரிவாயு வழங்குநர் குறைந்தபட்சம் 7,500 மெட்ரிக் டன் எல்பி எரிவாயு இருப்பை கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன், உள்நாட்டு சந்தைக்கு LP எரிவாயு தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்ய இது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 9,000 மெற்றிக் டன் எரிவாயுவை லாஃப்ஸ் எரிவாயு PLC நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களுக்கு உள்நாட்டு விற்பனைக்கு அனுமதிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி 21 வரை நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










