yarlathirady.com

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்.!

[2024-11-23 12:08:50] Views:[10]

கொழும்பில் விகாரை ஒன்றின் மலசலகூடத்தில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அனுராதபுரம், றம்பேவ, கெந்தேவ, கோணகும்புக்வெவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் தொழில்நுட்பம் படித்த மாணவன் என பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் இலத்திரனியல் தொழில்நுட்பம் தொடர்பான நடைமுறை பயிற்சிக்காக கொழும்பு வந்த குறித்த மாணவன், பயிற்சி முடியும் வரை ஜம்பட்டா வீதியில் உள்ள விகாரை ஒன்ரில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விகாரை பொதுக் மலசலகூடத்திற்குச் சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், விகாரையின் நிர்வாகிகள் விடுதியில் தங்கியிருந்த மற்றவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மலசலகூட கதவு திறக்காததாலும், உள்ளே இருந்து சத்தம் கேட்காததாலும் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மலசலகூட கதவை உடைத்து பார்த்த போது அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்துள்ளார்.

விசாரணையில், அவர் கழுத்தை தானே அறுத்துக் கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு பயன்படுத்திய கத்தியும் மலசலகூடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

மலசலகூட கதவு உட்புறம் பூட்டியிருந்தமையினால், மூன்றாம் நபரின் தலையீடு இருக்க வாய்ப்பில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.