யாழில் 14 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
[2024-11-23 10:28:17] Views:[11]
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் சகோதரனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி (14 வயது) என்ற மாணவியே நேற்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே நேற்று காலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பின்னர் குறித்த மாணவியின் குடும்பத்தினர் உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.










