வட பகுதிக்குள் நுழைந்த சந்தேக நபர்கள் ! மக்களிடம் பொலிஸாரின் அவசர வேண்டுகோள் ;
[2024-11-22 21:00:53] Views:[9]
அண்மையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான இவர்களை வவுனியா உட்பட வட மாகாணத்திற்குள் கண்டாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சீதுவ பகுதியை சேர்ந்த பிரேசுமனி துஷார, இந்திக்க சொய்சா மற்றும் உடுகம்பொல பகுதியை சேர்ந்த WAD சமன் ரணசிங்க என்பவர்கள் தொடர்பிலேயே பொலிஸார் இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7 கோடி பெறுமதியான பாரிய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் தற்சமயம் வவுனியா மற்றும் வடமாகண பகுதிகளில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை கோரியுள்ளனர்.
குறித்த நபர்களை பொதுமக்கள் யாரும் அடையாளம் கண்டால் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ணவின் தொலைபேசி இலக்கமான 0789776397 ஊடாக அல்லது 0716360020 (சிந்தக்க) ஆகியோரின் தொடர்பிலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.










