yarlathirady.com

அடை மழை; யாழில் 50 பேர் பாதிப்பு!

[2024-11-21 11:35:32] Views:[9]

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதன்படி, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/315 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும், J/328 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேலும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/56 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன, J/403 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.