முல்லைத்தீவில் கோர விபத்து; இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!
[2024-11-21 10:55:59] Views:[11]
முல்லைத்தீவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (20) மாலை 5.30 மணியளவில் மாங்குளம், வெள்ளாங்குளம், வன்னிவிளாங்குளம், 5ம் மைல் கல் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் மாங்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதான விஜயகுமார் விதுசன் மற்றும் 23 வயதான ஜெயகுமார் விதுசன் ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளதுடன், 31 வயதான மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாங்குளம் பகுதியிலிருந்து மல்லாவி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










