மாத்தளையில் நேர்ந்த கோர விபத்து
[2024-11-15 11:09:01] Views:[17]
நேற்று மாலை 7.30 மணியளவில் தம்புள்ளை - மஹியங்கனை வீதியின் எளவாகந்த பிரதேசத்தில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. தம்புள்ளையிலிருந்து மஹியங்கனை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றும் எதிர்த்திசையில் இருந்து வந்து கொண்டிருந்த வான் ஒன்றும் மோதியதில் விபத்துக்குள்ளாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விபத்தினையடுத்து பேருந்தில் பயணித்த 37 பேரும் வான் வண்டியில் இருந்த 05 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பேருந்தில் பயணித்த இருவரும் வேனில் பயணித்த ஒருவரும் விபத்தின் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.










