மரம் முறிந்து வீழ்ந்ததில் 2 பேர் காயம்!
[2024-11-14 09:19:26] Views:[14]
சீரற்ற காலநிலையினால் இரத்தினபுரி நீலகாமம் பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 2 பேர் காயமடைந்திருப்பதாக தெரிய வருகிறது. அங்கு நெடுங்குடியிருப்பில் உள்ள 7 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் 6 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் காவத்தை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










