yarlathirady.com

தனக்கு தெரியாமல் வேட்பாளர் பட்டியலில் பெயர்.? யாழில் பெண்ணொருவர் முறைப்பாடு.:

[2024-11-13 12:16:46] Views:[15]

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொர்பில் யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் நேற்றையதினம் குறித்த பெண் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுயேட்சை குழுவொன்று என்னுடைய அனுமதி இன்றி வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளது. இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை.

கடந்த திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து, தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவிய போதே, எனது பெயர் வேட்பாளர் பட்டியலில் வந்திருந்தமை தெரிய வந்தது.

யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகம் ஊடாக அது என்னுடைய பெயர் தான் என்பதனையும், எனது அனுமதியின்றி எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சை குழு தலைவர் உள்ளடக்கி உள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

அது தொடர்பில் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளேன் என தெரிவித்தார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.