13 ஆம் திகதி முதல் கொட்டித் தீர்க்கப்போகும் மழை
[2024-11-12 10:54:04] Views:[14]
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் எதிர்வரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பல தடவைகள் வட மாகாணத்தில் மழை பெய்யக் கூடும் வேளை ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் ஊவா,மத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 50 MM அளவில் ஒரளவு கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது. மத்திய, மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் இடியுடன் கூடிய மழையும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.










