கொட்டித் தீர்க்க போகும் கன மழை
[2024-11-10 10:55:08] Views:[13]
வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (10) வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வுக்கூறப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஊவா மற்றும் மத்திய, தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் எனவும்
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தெரிய வறுறது.










