அக்குரணை நகரம் வெள்ளத்தில்!
[2024-11-09 10:29:15] Views:[12]
நேற்றையயதினம் (08) பிற்பகல் முதல் கனமழை பெய்துவருவதன் காரணமாக அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது.
அதன் காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியின் போக்குவரத்து 3 மணித்தியாலங்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்ததாகவும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.










