அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!
[2024-11-07 10:39:31] Views:[16]
வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகத்துடன் விசேட சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு கால்நடைப் பண்ணையாளர்களுக்கு உச்சபட்ச சேவை வழங்குவதற்கு தடையாகவுள்ள பல இடர்பாடுகள் தொடர்பாக சங்கத்தினர் ஆளுநருடன் கலந்துரையாடியதாக தெரிய வருகிறது.
பதிலளித்த ஆளுநர், உடனடியாக செய்யக் கூடியவற்றை செய்வதாகவும் ஏனையவற்றை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்க்க முனைவதாகவும் உறுதியளித்திருந்தார். இச்ந்திப்பில் வடக்குமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர், செயலாளர்,உபதலைவர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.










