யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழப்பு!
[2024-11-06 19:06:31] Views:[12]
யாழ். சிறுப்பிட்டி மேற்கு பகுதியி்ல் நேற்று இரவு 35 வயதான இளைஞர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
நேற்றிரவு தனது வாகனத்தில் நித்திரையில் இருந்த போது குளவி கொட்டியுள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.










