வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!
[2024-11-05 11:24:49] Views:[9]
வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, , ஊவா மாகாணங்களிலும் மற்றும் குருநாகல் மாவட்டம் உட்பட சில இடங்களில் சுமார் 100 mm அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையிலும் பல இடங்களில் மழை பெய்யும் எனவும் மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










