யாழ்.ஆனைக்கோட்டையில் வீடொன்று மீது தாக்குதல்!
[2024-11-05 10:37:53] Views:[12]
நேற்று (03) இரவு 11 மணியளவில் யாழ்.ஆனைக்கோட்டையில் உள்ள வீடொன்று இனந்தெரியாத நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
வீட்டார் நித்திரையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 4 பேர் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்தும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திவிட்டும் சென்றுள்ளதாகவும் இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.










