யாழில் கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்ஆபத்தான நிலையில் !
[2024-11-04 11:01:01] Views:[10]
நேற்றையதினம்(03) யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் கடற்றொழிலுக்காக வந்திருந்த இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனுமதிக்கப்பட்டவர் 23 வயதான இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.தொழில் நிமித்தம் கட்டைக்காட்டுப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் வீதியில் இனம்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் சுயநினைவிழந்த நிலையில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.










