கிளிநொச்சி - கௌதாரி முனைப்பகுதியில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா
[2024-11-04 07:25:01] Views:[11]
கிளிநொச்சி கௌதாரி முனைப்பகுதியில் இன்று அதிகாலை சுமார் 80 கிலோ கஞ்சாவை இராணுவ புலனாய்வுப்பிரிவினர் அதிரடியாக கைப்பறியுள்ளனர்
இந்தியாவிலிருந்து படகுமூலம் கௌதாரிமுனைப் பகுதிக்கு கஞ்சா எடுத்துவரப்படுவதாக இராணுவ புலனாய்வுப்பிரவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட அதிரடி நடவடிக்கையின் போது, மேற்படி கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன
குறித்த பொதிகள் படகிலிருந்து எடுத்துவரப்பட்டு விற்பனை நடவடிக்கைக்காக கைமாற்றம் செய்ய இருந்த நிலையில் இராணுவத்தினர் அதிரடியாகக் களமிறங்கி கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாப்பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக புநகரி பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.










