மட்டக்களப்பில் கரை ஒதுங்கும் கறுப்பு மீன்கள்
[2024-10-31 10:59:51] Views:[9]
நேற்று (29) மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் ஒருவகை மீனினம் ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு, குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு சிறிய அளவிலான கறுப்பு நிற மீன்கள் கரை ஒதுங்குவதை அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.
காலநிலை மற்றும் கடலில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் காரணமாக இந்த சிறிய ஊம்பல் மீன் கரை ஒதுங்குவதாக மீனவர்கள் குறிப்பிடுவதாக தெரிய வருகிறது.










