அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் எடுத்த இளைஞன் பலி.!
[2024-10-31 09:52:12] Views:[11]
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்த குறித்தத இளைஞன் சிறிது காலம் திருந்தி வாழ்ந்து வந்துளளார்.
நிலையில் நேற்றுமுன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து ஹெரோயினை உள்ளெடுத்த போது வாயிலிருந்து நுரைதள்ளி உயிரிழந்துள்ளார்.
அதிக ஹெரோயின் உட்கொண்டதே மரணத்துக்குக் காரணம் என்று பிரேத பரிசோதனையில் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.










