அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு.!
[2024-10-30 10:00:43] Views:[10]
குருணாகல் நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாவிட்டிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றின் கிணற்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவர் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் நாரம்மல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










