தீபாவளி பண்டிகை; ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை.
[2024-10-30 09:26:11] Views:[10]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண ஆளுநரின் ஆலோசனையின் பேரில் ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடுமுறை நாளுக்குரிய கல்வி நடவடிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை ஈடுசெய்யப்படவுள்ளது.
தமிழ் மக்களின் விஷேட பண்டிகையான தீபாவளி இம்மாதம் 31 ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகின்றமையால் நவம்பர் முதலாம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு ஊவா மாகாண ஆளுநரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
அதனை பரிசீலித்த ஆளுநர் நவம்பர் முதலாம் திகதி ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு ஆலோசனை வழங்கியதாக மாகாணா கல்வி செயலாளர் காமினி மஹிந்தபால தெரிவித்தார்.
இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளில் அந்நாளுக்குரிய கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை ஈடுசெய்யப்பட வேண்டும் என அறிவுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.










