யாழில் பாடசாலை ஒன்றின் முன்பு கொதித்தெழுந்த பெற்றோர்கள் போராட்டம்.!
[2024-10-29 07:11:07] Views:[10]
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் வடக்கு, றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக நேற்றையதினம் (28) ஒன்று திரண்ட பெற்றோர்கள், ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அசண்டையீன செயற்பாடு, பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் தொலைபேசி பாவித்தல் என பல குறைபாடுகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது அவர்கள் வீதியை மறித்து போராடியதால் சிறிதுநேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இருப்பினும் சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் நிலைமையை சரிசெய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.










