போக்குவரத்து விதிகளை மீறி பந்தயம்- 9 பேர் கைது!
[2024-10-28 12:38:26] Views:[10]
போக்குவரத்து விதிகளை மீறி முச்சக்கரவண்டி செலுத்திய நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (28) பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாலை பந்தயம் வைத்து ஓடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 முச்சக்கர வண்டிகள் மற்றும் 09 சாரதிகள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, மோதரை, கெரவலப்பிட்டிய மற்றும் மாபோல பிரதேசங்களை சேர்ந்த சாரதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










