யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை
[2024-10-27 19:07:51] Views:[10]
நாளை (28) கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை யாழ்தேவி தொடருந்து ஆரம்பிக்கவுள்ளதாக தெரிய வருகிறது.
கொழும்பு கோட்டையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு தொடருந்து புறப்படவுள்ளது. தொடர்ந்து மறுநாள் 29 ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53 இற்கு யாழ்ப்பாணம் பிரதான தொடருந்து நிலையத்தை வந்தடைந்து 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும். சில நாட்களாக புனரமைப்பு பணிகள் காரணமாக வடக்கு தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










