உழவு இயந்திரமும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து - முல்லைத்தீவில் சம்பவம்
[2024-10-27 12:04:44] Views:[10]
நேற்று(26) முல்லைத்தீவில் கேப்பாபுலவு வீதியில் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரமும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது.
உழவு இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










