யாழில் கிணற்றிலிருந்து கைக் குண்டுகள் மீட்பு!
[2024-10-27 06:11:10] Views:[11]
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் பாவனையில்லாத கிணற்றில் இருந்து 11 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி, பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள காணி ஒன்றிலிருந்தே இவ்வாறு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை கொட்டி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பற்றைக் காணியில் ஒன்று நேற்று (26) துப்பரவு செய்யப்பட்டும்போது அக் காணிக்குள் இருந்த பாவனையில்லாத கிணறு துப்பரவாக்கும் போதே கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் குழுவினரால் குண்டுகள் மீட்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.










