மழை காரணமாக யாழில் 60 பேர் பாதிப்பு.!
[2024-10-26 06:16:03] Views:[12]
தொடர்ச்சியாக பொய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/157 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/278 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/410 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், ஜே/417 கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும், ஜே/393 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும், ஜே/413 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.










