yarlathirady.com

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட தொகுதிக்குத் வெடி குண்டு அச்சுறுத்தல்.!

[2024-10-25 12:19:47] Views:[9]

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகப் போலி முகவரியிலிருந்து கிடைக்கப் பெற்ற கடிதத்தையடுத்து இன்று (25) அங்கு பதற்றநிலை ஏற்ப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து பொலிஸார் சோதனையில் ஈடுபட்டதுடன், அப்பகுதிக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் குறிப்பிடுகையில்,

குறித்த கடிதம் இனந்தெரியாதோரினால் போலி முகவரி ஒன்றிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில் வேறு எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

அங்கு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதியின் வழமையான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

எவ்வாறாயினும், குறித்த கடிதம் தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.