முதியவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 10வயது சிறுமி !
[2024-10-24 21:28:23] Views:[10]
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் தனித்திருந்த 10 வயது சிறுமி ஒருவர் 60 வயது முதியவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் மருதங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவரது வீட்டுக்கு பின் வீட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இதனை சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்திய நிலையில், பெற்றோரால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த முதியவர் தலை மறைவாகியுள்ள நிலையில் மருதங்கேணி பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனைகளுக்காக குறித்த சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.










