யாழில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் மீட்பு !
[2024-10-24 20:41:20] Views:[10]
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை வீடொன்றில் சோதனை நடத்தப்பட்டது.
இதன் போது ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட போதும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட்டவில்லை.
வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஊர்காவற்துறை பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.










