யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் ;
கஜேந்திரகுமார் மற்றும் பார்த்தீபன் கைது !
[2024-10-24 20:05:16] Views:[13]
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் போது தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் பருத்தித்துறை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் பருத்தித்துறை பொலிஸாராலும், நெல்லியடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸாராலும் கைது செய்யப்பட்டனர்.
கட்சி ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அந்த அந்த பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், அவர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் இருவரையும் பிணையில் விடுவித்துள்ளனர்.










