யாழிலிருந்து நோயாளர்களுடன் மட்டக்களப்பு நோக்கி பயணித்த நோயாளர் காவுவண்டி விபது !
[2024-10-24 12:29:05] Views:[12]
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர்களை MR பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் அழைத்து வந்து மீண்டும் மட்டக்களப்புக்கு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவுவண்டி, கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நோயாளர் காவு வண்டியில் மூன்று நோயாளர்கள் பயணித்த நிலையில் நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அவர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.










