2240 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது !
[2024-10-24 06:03:04] Views:[15]
யாழ்ப்பாணத்தில் 2240 போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில் 840 போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான இளைஞனை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த இளைஞன் ஏற்கனவே போதை மாத்திரைகளுடன் கைதாகி அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, நேற்று முன்தினம் மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 1400 போதை மாத்திரைகளை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










