சம்மாந்துறையில் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு !
[2024-10-22 15:05:25] Views:[11]
அம்பாறையில் வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்மாந்துறை பகுதியில் உள்ள குறித்த வீட்டின் கட்டட வேலைக்காகக் கொட்டப்பட்ட மண்ணிலிருந்து அந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வீட்டு உரிமையாளரால் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் கைக்குண்டை செயலிழக்கச் செய்ததாக தெரியவந்துள்ளது.
சம்மாந்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










