குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி !
[2024-10-20 11:52:27] Views:[11]
சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்து நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாகவும், இதில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










