மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ;
யாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம் !
[2024-10-19 12:41:26] Views:[16]
எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் வடக்கிற்கான புகையிரத சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் யாழ்தேவி புகையிரதத்தை சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் புகையிரத திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடக்கு புகையிரத மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது புகையிரத சேவை முன்னெடுக்கப்படு வருகின்கிறன.
இதேவேளை மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரத பாதையை எதிர்வரும் 22ம் திகதி திறக்கவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலி அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும், பழுதுகளை சரி செய்வதற்காக ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் தொடருந்தை இயக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
இதன் காரணமாக 64 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணித்தியாலத்தில் கடக்கும் முயற்சி, இரண்டரை மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










