இ.போ.ச பேருந்து சாரதி மீது தாக்குதல் !
[2024-10-19 11:34:39] Views:[14]
கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச. பேருந்தை வவுனியாவில் வழிமறித்த தனியார் பேருந்து பணியாளர்கள் அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று (18) மாலை 6.50 மணியளவில் கொட்டன்கள், பொல்லுகளுடன் குறித்த பேருந்தில் ஏறிய இருவர் சாரதி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர்.
தாக்குதலில் காயமடைந்த சாரதி பேருந்தை பயணிகளுடன் வவுனியா பொலிஸ் நிலையம் கொண்டு சென்று முறையிட்ட பின்னர், வவுனியா வைத்தியசாலை சென்று சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் தனியார் பேருந்தில் பணியாற்றுபவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.










