யாழில் பிறந்து 45 நாட்களான குழந்தை உயிரிழப்பு!
[2024-10-19 10:51:36] Views:[12]
யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடிகாமம், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் அன்றையதினம் 4:00 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் குழந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்றையதினம் மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
எனினும், குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.










