யாழில் பலத்த காற்று தூக்கி வீசப்பட்ட வீட்டு கூரை!
[2024-10-19 10:14:20] Views:[12]
யாழ்ப்பாணத்தில் நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக வீடு ஒன்றின் கூரைகள் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிப்படைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கானைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு ஜே/162 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் கூரையே தூக்கி வீசப்பட்ட நிலையில் வீட்டுக்குள் வெள்ளமும் உட்புகுந்துள்ளது.
இந்த நிலையில் கொடுத்த வீட்டில் வசித்தவர்கள் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.










