yarlathirady.com

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 750,000 பேர் விண்ணப்பம் ;

[2024-10-18 13:10:34] Views:[14]

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 750,000 பேரின் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியல் அத்தாட்சிப்படுத்தல் நடவடிக்கை நேற்று முன்தினம் இடம்பெற்றது.

அஞ்சலிடல் பணிகளுக்காகக் தபால் மூல வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 5 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதன்படி, மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இம்மாதம் 30ஆம் திகதியும், அடுத்த மாதம் 4ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவ முகாம்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க தவறுபவர்களுக்காக அடுத்த மாதம் 7ஆம் 8ஆம் திகதி வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.