yarlathirady.com

யாழ். மாவட்ட வேட்பாளர் மற்றும் பொலிஸார் இடையே விஷேட கலந்துரையாடல்; போட்டியிடும் 44 தரப்புக்களையும் உள்ளடக்கிய குழு நியமணம் !

[2024-10-17 11:45:45] Views:[14]

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் யாழ். பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய மாநாட்டு மண்டபத்தில் நேற்று (17) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் யாழ். பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சூரிய பண்டார தலைமையில், யாழ். மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலர் சிறிமோகனின் பங்கெடுப்புடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் வன்முறைகளைத் தடுக்கும் முகமாக குழு ஒன்று அமைக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அந்தவகையில், யாழ். பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய 51 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.

இந்தக் குழுவில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சார்பில் 7 உறுப்பினர்களும், தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 44 உறுப்பினர்களும் என மொத்தமாக 51 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.

மேலும், வேட்பாளர்களின் பசுகாப்பு, தேர்தல் விதிகள், தேர்தல் பிரசார இடங்களுக்கு அனுமதி கோரல், ஒலிபெருக்கி சாதனங்களைப் பயன்படுத்தும் கால அளவு தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதுடன், பொலிஸாரால் உரிய அறிவுறுத்தங்கள் தேர்தலில் போட்டியிடும் தரப்புக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் சிறீமோகன், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.