yarlathirady.com

ஐரோப்பா - ரசியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞன்! கொலையா என சந்தேகம்?

[2024-10-17 10:40:50] Views:[11]

ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதான எஸ். ஜதுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த இளைஞர் உறவினர்கள் உதவியுடன் ஐரோப்பா நாட்டுக்கு செல்ல முயற்சியில் ஈடுபட்டுவந்த நிலையில், ஒரு வருடங்களுக்கு முன்னர் அரபு நாடு ஒன்றிற்கு சென்று அங்கிருந்து இருந்து ஐரோப்பா நாடுக்கு செல்ல முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 14.10.2024 திகதி 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஐரோப்பா - ரசியா எல்லையை கடக்க முயற்சி செய்த நிலையில் குறித்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.

இது கொலையா? இயற்கை மரணமா? என்ற சந்தேகம் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில், இளைஞனின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர உறவினர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.