yarlathirady.com

கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளுடன் ஐவர் கைது !

[2024-10-17 06:14:48] Views:[10]

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டதுடன், ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2024.10.10 திகதி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 16 பவுண் நகைகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டுத் தப்பித்திருந்தனர்.

கணவன் - மனைவி இருவரும் பணிக்குச் சென்று வீடு திரும்பிய நிலையிலேயே வீட்டில் திருட்டு இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டு கமராவின் ஆதாரத்துடன் சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் கடந்த (15) செவ்வாய்க்கிழமை திருட்டுச் சந்தேக நபர்களான இரண்டு பெண்கள் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்ட வர்த்தகர்கள் இருவர் உட்பட ஐவரைக் கைது செய்திருந்தனர்.

அத்தோடு உருக்கப்பட்ட நிலையில் நகைகளும் - திருட்டுச் சந்தேக நபர்களான பெண்களிடம் இருந்து நகை விற்ற 7 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் நகை விற்ற பணத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆடம்பர மின் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.