யாழில் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் நிகழ்வு;
[2024-10-16 16:45:28] Views:[10]
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் சாய் முரளி, யாழ் மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாணம் பொதுசன நூலக பிரதம நூலகர் மற்றும் இந்தியத் துணை தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.










